ETV Bharat / state

"திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும்" - அதிமுகவினர் கோரிக்கை! - பொன்முடி

Tirukkoyilur Assembly Constituency: திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கக் கோரி சட்டப்பேரவை அலுவலகத்தில் சட்டப்பேரவை செயலாளரைச் சந்தித்து அதிமுகவினர் கடிதம்‌ வழங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 8:12 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை காலியாக உள்ளதாக அறிவிக்கக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரைச் சந்தித்து கடிதத்தை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். அதன்படி, 19.12.2023 அன்று நீதிபதி பொன்முடியை குற்றவாளி என்றும், 21.12.2023 அன்று 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவரை பதவியில் இருந்தும் நீக்கி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், அவருடைய தொகுதியான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை காலியாக உள்ளது என அறிவிக்க வேண்டியது சபாநாயகரின் கடமையாகும். ஆனால், இன்று வரை திருக்கோவிலூர் தொகுதியை காலியாக உள்ளது என சபாநாயகர் அறிவிக்கவில்லை‌.

இது தொடர்பான அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டு, சட்டப்பேரவைத் தலைவர் இல்லாத நிலையில், சட்டப்பேரவை செயலாளரைச் சந்தித்து கடிதத்தை வழங்கியுள்ளோம்.

பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு நகல்கள் சட்டமன்ற செயலகத்திற்கு கிடைத்த பிறகு, அது மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொன்முடி வழக்கிலும் 3 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அது தொடர்பான நகல்கள் கிடைத்தவுடன், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ தெரிவித்தோம்.

பதிவாளரிடம் இருந்து நீதிமன்றத் தீர்ப்பு குறித்த உரிய கோப்புகள் வரவில்லை எனவும், நீதிமன்றத்தில் இருந்து கோப்புகள் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்‌. கோப்புகள் பெற்ற பின்பு, அறிவிப்பை வெளியிட காலம் தாழ்த்த மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: “இடம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை” - கூடங்குளம் சி பிரிவு தேர்வு தொடர்பாக அப்பாவு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.