சென்னை: அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரான இன்பதுரை தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
அந்த மனுவில்,"தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மேற்பார்வையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் உரையாடல்கள், இடைமறித்து ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுவதாகவும், குறிப்பாகத் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறி வைக்கப்படுவதாக தங்களுக்கு காவல்துறையில் பணியாற்றும் சிலர் மூலம் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட 92 நாடுகளில் ஐபோன் பயனர்களைக் குறி வைத்து இதே போன்ற ஒரு ஒட்டுக் கேட்பு முயற்சி நடைபெற்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுகவின் முக்கிய தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோரின் உரையாடல்களை ஒட்டுக் கேட்டு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் தினமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரிவிப்பதாக மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக உளவுத்துறையின் இந்த நியாயமற்ற செயல்பாடு நேர்மையான தேர்தல் என்ற நோக்கத்தைச் சிதைப்பதாகவும், கருத்துரிமை சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் இருப்பதால், தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரான இன்பதுரை மனுவில் தெரிவித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: பட்டியல் சமூக பெண் தொழிலாளி மீது 'செயில்' நிறுவனம் கண்மூடித்தனாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு! - Attack On Dalit Woman Worker