தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசியல் கட்சிகள், 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன.
ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்றத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு முதன்முதலில் வேட்பாளரை அறிவித்துள்ளது, நாம் தமிழர் கட்சி. இதன்படி, மருத்துவர் ஜா.ரொவினா ரூத் ஜேன் என்பவரை வேட்பாளராக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பல் மருத்துவரான ரொவினா ரூத் ஜேனின் சொந்த ஊர் தூத்துக்குடி ஆகும்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அத்துமீறல்; அந்தரங்களைக் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் மீது பெண் புகார்!