ETV Bharat / state

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு! - African catfishes destroyed - AFRICAN CATFISHES DESTROYED

African Fish in Salem: சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியில் பிடிபட்ட 20 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டது.

ஏரியில் பிடிபட்ட கெளுத்தி மீன்கள்
ஏரியில் பிடிபட்ட கெளுத்தி மீன்கள் (Credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 3:15 PM IST

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியானது சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியானது 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு தூர்வாரி அழகுபடுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தூர்வாரும் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் ஏரி திறப்பு விழா செய்ய வேண்டும் என்பதற்காக, பணிகள் தற்போது அவசர கதியில் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். இதற்கிடையே, ஏரியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் ஏராளமாக பிடிபட்டு அழிக்கப்பட்டது.

சுமார் 20 கிலோ எடை கொண்ட மீன்கள் நூற்றுக்கணக்கில் பிடிபட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வகை மீன்களை உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஏரியில் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் பிடிபட்டுள்ளதால், ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றி, பின்னர் அதில் மேலும் இந்த வகை மீன்கள் இருக்கின்றனவா என்று உறுதி செய்து, அதனை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், இந்த மீன்கள் மீண்டும் உற்பத்தியானால், மற்ற மீன்களை உட்கொண்டு முழுவதுமாக மற்ற வகை மீன் இனங்கள் அழிந்துவிடும். அதனால் முறையாக தூர்வாரி ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும், ஏரி தூர்வாரி அழகுபடுத்தினாலும் ஏரிக்கு நீர் வரக்கூடிய நீர்வழிப் பாதைகள் முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதியினர், இந்த நீர்வழிப் பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி ஒழுங்குபடுத்தினால் தான் இந்த ஏரி தூர்வாரப்பட்ட பணிகளுக்கான பலன் அளிக்கும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 50 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத வாய்க்கால்கள்.. 150 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை! - Canel Issue In Thiruvarur

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.