சென்னை: தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம். இங்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் அண்ணா அறிவாலயம் வெளியே தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நுழைவுவாயில் வழியே உள்ளே செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள், அவரை தடுத்டு நிறுத்தி உள்ளனர். மேலும் அந்த நபர் அதிக மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையாடு யார் நீ? எங்கிருந்து வருகிறார்? என அவரிடம் காவலர்கள் கேள்வி விசாரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலைக் அண்ணா அறிவாலயம் நோக்கி தூக்கி வீசி உள்ளார். ஆனால் அது நுழைவுவாயலிம் அருகேயே கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மது போதையில் ரகளை செய்து கொண்டு இருந்த நபரைப் பிடித்துக் காவல் நிலையம் அமைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கோவர்தன் என்பதும் இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மதுவால் தினசரி தங்கள் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதனை திமுகவினர் தான் விற்பனை செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்து மதுவினை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டிலை வீசியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்த அந்த நபரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருக்குப் பின்புலத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழைய ஸ்டூடண்ட் Vs பல்லு போன நடிகர்கள்.. துரை முருகன் பேச்சுக்கு ரஜினிகாந்த் கூறியது என்ன?