ETV Bharat / state

திமுக எம்எல்ஏ வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்ற நிர்வாகி மரணம்.. வெளியான முக்கிய கடிதம்! - dmk Administrator suicide - DMK ADMINISTRATOR SUICIDE

DMK Administrator suicide: மதுரை திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்த திமுக நிர்வாகி கணேசனின் உறவினர்களை எம்எல்ஏ கோ.தளபதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

உறவினர்களை சந்தித்த எம்எல்ஏ
உறவினர்களை சந்தித்த எம்எல்ஏ (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 4:32 PM IST

மதுரை: மதுரை மாநகர ஆவின் திமுக தொழிற்சங்க கௌரவத் தலைவராக பதவி வகித்து வந்தவர் கணேசன். இவர் கடந்த 10 ஆண்டுளுக்கும் மேலாக திமுகவில் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சிம்மக்கல் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை முன்பாக, தமிழக ஆளுநரை மாற்றக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதில் அவரது உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் திமுக தலைமைக்கும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதிக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் மேயருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “மானகிரி பகுதி திமுக வட்டச் செயலாளர் திடீரென ரூ.3.5 கோடி அளவிற்கு சம்பாதித்துள்ளார். நான் கடந்த ஆண்டு ஆளுநருக்கு எதிராக தீக்குளிக்க முயன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திமுகவினர் யாரும் என்னைச் சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.

எனது புகாரை நேரடியாக அமைச்சர் மூலம் விசாரிக்கலாம், எனது புகார் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்றால் நான் சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக தீக்குளித்து உயிரை மாய்ப்பேன்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை திமுக தலைமையும், மாநகர் மாவட்ட திமுக தலைமையும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, மூலக்கரை பகுதியில் உள்ள மதுரை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதியின் வீட்டிற்கு கணேசன் நேற்று காலை சென்றுள்ளார். வீட்டிற்கு வெளியே நின்றபடி திடீரென தற்கொலைக்கு முயன்றார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்கொலை விவகாரம் தொடர்பாக கணேசனிடம் மதுரை மாவட்ட 6வது நீதிமன்ற நீதிபதி நேரில் வந்து வாக்குமூலம் பெற்றுச் சென்றார். இந்நிலையில், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலையை கைவிடுக
தற்கொலையை கைவிடுக (Credits - ETV Bharat Tamil Nadu)

இத்தகவலறிந்து மதுரை திமுக மாவட்டச் செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி அரசு மருத்துவமனைக்கு வந்து, உயிரிழந்த கணேசன் உடலுக்கு மரியாதை செலுத்தி பின்பு குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : கோவையில் பிரியாணி போட்டி.. உணவக மேலாளர் மீது வழக்கு.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! - coimbatore biryani competition

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.