ETV Bharat / state

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான வழக்கு.. ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Chennai High Court: நாட்டின் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கேட்டறிந்த பிறகு, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்துக் கொள்கை முடிவு எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 6:16 PM IST

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி 2012ல் லோக் சத்தா கட்சி மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரன், 2015ல் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த், 2023ல் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் P.S.ராமன் ஆஜராகி, மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிற தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், 7 மாநிலங்கள் தகவல்களை வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மீதமுள்ள மாநிலங்களிடம் இருந்து விளக்கங்களைப் பெற்ற பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் ஔிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரர்கள் குற்றச்சாட்டாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டால், 5 நிமிடத் தாமதமாக ஒளிபரப்பலாம் என யோசனை தெரிவித்தனர்.

அந்த இடைவெளியில், அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கிவிட்டுக் கூட ஒளிபரப்பலாம் என்றும் தெரிவித்த நீதிபதிகள், அரசின் நடவடிக்கையில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: இயற்கையான உணவுகளின் மூலம் சுவாச நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும் - எப்படித் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.