சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், காவலர் பயிற்சி மைய டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் நியமனம் செய்து தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
IPS -Transfers & Postings#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan@tnpoliceoffl pic.twitter.com/wFAVsT2tD8
— TN DIPR (@TNDIPRNEWS) July 8, 2024
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுவிட்டது என தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள் - தமிழக அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்