சென்னை: சென்னை சாலிகிராமத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற மரக்கன்று அளித்தல் மற்றும் நடுதல் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் விஜய்யின் புலி திரைப்பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் மற்றும் மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, "தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி இரட்டை இலை சின்னம் போட்டியிடாமல் தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்பதை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என்னைப் போன்ற பலரின் விருப்பம் ஆகும். அதிமுக ஒதுங்கிப் போவதன் மூலமாக பாஜக மட்டும் தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்கின்ற பிம்பத்தை உருவாக்கும். திமுக தேர்தலில் நிற்கும் இடத்தில் அதிமுக எதிர்க்க வேண்டும்.
அப்பொழுதுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் உருவாக்கிய ஒரு அதிமுகவாக இருக்கும். ஒதுங்கிப் போவதால் பாஜக தான் பிரதான எதிர்க்கட்சி, அதிமுக மூன்றாவது இடத்தில் இருக்கிறோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல இருக்கிறது. இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை" என்றார்.
இதையும் படிங்க: "பிரதமர் 8 முறை வந்தும் முடியாததை ராகுல் ஒரே ஸ்வீட் பாக்சில் முறியடித்துவிட்டார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - DMK Mupperum Vizha