சென்னை: நடிகை கவுதமி பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகினார். இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். லோக்சபா தேர்தலிலும் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் "அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் லோக்சபா தேர்தலை தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/UUpgr1DGkH
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) October 21, 2024
இதையும் படிங்க: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின்பும் அதிமுக போராட்டங்களை சந்தித்து வருகிறது" - நெல்லையில் ஈபிஎஸ் பேச்சு!
இதேபோல அதிமுக சிறுபான்மையின நலப் பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்த சன்னியாசி தற்போது விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமு பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இவ்வாறு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததும் அவருக்கு அதிமுக ஐடி விங் இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்