ETV Bharat / state

விஜய் கல்வி விருது வழங்கும் விழா; அரசியல் கட்சித் தலைவராக விஜயின் முதல் மேடை! - TVK VIJAY EDUCATION AWARD 2024 - TVK VIJAY EDUCATION AWARD 2024

TVK VIJAY EDUCATION AWARD 2024: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு 'விஜய் கல்வி விருது வழங்கும் விழா'-வில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 10, 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்குகிறார். இது விஜய் அரசியல் கட்சி தொடங்கியப் பின்னர் பங்கேற்கும் முதல் மேடை நிகழ்ச்சியாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 10:20 AM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு 'கல்வி விருது விழா' சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்று 750 விருதாளர்கள் உட்பட 3500-க்கும் மேற்பட்ட பெற்றோர், மாணவர்கள் என இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் அவர் கையாலேயே சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ரூ.5000 ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கி பாராட்டுகிறார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா, இன்று (ஜூன் 28) மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதில் முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மீதமுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெற உள்ளது.

இதில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு ஒன்றாக அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி மாலை 6 மணிக்குள் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே 10 லிருந்து 15 நிமிடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்ற இருக்கிறார்.

இந்நிலையில் விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருக்கும் மாணவர்களுடன் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இவ்விழாவில் 750 விருதாளர்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில் பங்கேற்க, 21 மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ மாணவியர்கள் அழைத்து வர ஏற்கனவே, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முழு செலவில், அவர்களை அழைத்து வந்து மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் திருவான்மியூர் தனியார் திருமண மண்டபத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக நடத்திய கல்வி விருதுகள் விழா, இந்த ஆண்டு அக்கட்சியின் தலைவர் கலந்து கொள்ளும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தவெக தலைவராக நாளை மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்.. சென்னை விரையும் மாணவர்கள்! - Vijay Meet Students

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.