ETV Bharat / state

நாளைய தீர்ப்பு முதல் நாளைய முதல்வர் வரை.. நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷல்! - Vijay 50th birthday - VIJAY 50TH BIRTHDAY

Vijay 50th birthday: பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்
நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் (Credits - Vijay Fans X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 1:00 PM IST

சென்னை: தமிழ்நாடு மக்களை பொறுத்தவரை எந்தத் துறையிலும் ஒருவரை பிடித்து விட்டால் அவரை வாழ்நாள் முழுவதும் உச்சத்தில் வைத்து கொண்டாடுவர். அதுவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் வித்தியாசமானவர்கள். அவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அது யாராக இருந்தாலும் கடைசி வரை அவர்களது மனதை விட்டு அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர் நடிகர் விஜய்.

ஆனால் இந்த இடத்தை விஜய் அத்தனை எளிதாக அடைந்துவிடவில்லை. அப்பா இயக்குநர் என்பதால் சிறுவயதிலேயே வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு தன் மகனை மிகப் பெரிய ஹீரோவாக கொண்டுவர நினைத்த எஸ்ஏ சந்திரசேகர் விஜய்யை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கினார்.

1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். படத்தை பார்த்த பலரும் விஜய்யின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தனர். இயக்குநரின் மகன் என்பதால் சுலபமாக ஹீரோவாகி விட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

ஆனால் வாரிசாக இருந்தால் வாய்ப்பு மட்டுமே கிடைக்கும் திறமையும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு விஜய் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். தொடர்ந்து அப்பாவின் படங்களில் நடித்து வந்த விஜய்க்கு 'பூவே உனக்காக' திரைப்படம் கொடுத்த வெற்றி அவரது திரை வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இப்படம் விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதனைதொடர்ந்து லவ் டுடே, காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ் ஆகிய படங்களின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் ஈர்த்தார்.

அதன் பிறகு தனது பாணியை முற்றிலும் மாற்றி திருமலை படத்தின் மூலம் அதிரடி ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்தார். விஜய் நடித்து வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய வெற்றி விஜய்யை மாஸ் அந்தஸ்து கொண்ட நடிகராக மாற்றியது.

இதற்கிடையில் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறாத போது விஜய் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என பேச்சுக்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து வெளிவந்த நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

அதுவரை இளைய தளபதி விஜய் என அழைத்து வந்த ரசிகர்கள், பிறகு தளபதி என அழைக்க தொடங்கினர். இதனிடையே விஜய் நடிக்கும் படங்களுக்கு சர்ச்சைகளுக்கு குறைவில்லை. அதே நேரத்தில் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யத் தொடங்கினார்.

இதனைதொடர்ந்து மாஸ்டர் படத்தில் JD என்கிற கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடிப்பை வெளிப்படுத்தினார். பெரும் நட்சத்திர பிம்பம் கொண்ட நடிகர் மார்க்கெட்டை பொருட்படுத்தாமல் படத்தின் கதைக்காக குடிபோதையில் இருக்கும் பேராசிரியராக நடித்தது பாராட்டை பெற்றது.

திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த நேரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், தான் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்துவிட்டு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து விஜய் மேலும் ஒரு படம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று தனது 50வது பிறந்தநாள் கொண்டாடும் விஜய், விரைவில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார். அதற்கு முன்னதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழலில் விஜய்யின் அரசியல் நகர்வை அவரது ரசிகர்கள் மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். விஜயின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைந்தாலும் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 50வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு சமூக வலைத்தளங்களில் நாளைய முதல்வரே என பதிவிட்டு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் பிறந்தநாள்: தெறிக்கும் தீப்பொறி..! ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த 'கோட்' படக்குழு - Vijay GOAT update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.