ETV Bharat / state

பழைய ஸ்டூடண்ட் Vs பல்லு போன நடிகர்கள்.. துரை முருகன் பேச்சுக்கு ரஜினிகாந்த் கூறியது என்ன? - Durai Murugan Vs Rajinikanth - DURAI MURUGAN VS RAJINIKANTH

Durai Murugan Vs Rajinikanth: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நடிகர் ரஜிகாந்தை பல்லு போன நடிகர் என சாடியிருந்த நிலையில், அமைச்சர் துரை முருகனை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் எப்போதும் எனது நண்பர் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரை முருகன்
நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரை முருகன் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 11:12 AM IST

சென்னை: சென்னையில் கடந்த சனிக்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட அதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

இந்த விழா மேடையில், பேசிய நடிகர் ரஜினிகாந்த், மூத்த அமைச்சர்களை சமாளிப்பது மிக கடினம், குறிப்பாக அமைச்சர் துரைமுருகன், கருணாநிதி கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் என அமைச்சர் துரைமுருகன் குறித்து நகைச்சுவையாக பேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தில் இருந்தவர்களும் குளுகுளுங்கி சிரித்தனர்.

இது தொடர்பாக நேற்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த துரை முருகனிடம், ரஜினிகாந்தின் பேச்சு தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது, அப்போது,"பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது" என கடுமையான தொனியில் விமர்சனம் செய்தார். அமைச்சர் துரை முருகனின் இந்த பேச்சு திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, விஜயவாடாவில் நடக்கும் 'வேட்டையன்' மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு சென்ன சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், அமைச்சர் துரை முருகன் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், அமைச்சர் துரை முருகன் எனது நெருங்கிய நண்பர், அவர் என்ன சொன்னாலும் அவரை பிடிக்கும், எங்களது நட்பு தொடரும்" என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், "தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்" தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பல்லு போன நடிகர்கள் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை" - துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.