சென்னை: பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் நேர்காணல் கொடுத்திருந்தார். அந்த நேர்காணலில் நடிகர் பிரசாந்த் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டும், அவருக்கு பின்னால் தனியார் யூடியூப் சேனல் தொகுப்பாளினி அமர்ந்து கொண்டும் நேர்காணலை கொடுத்திருந்தார்.
சாலை முழுவதும் நடிகர் பிரசாந்த் மற்றும் தனியார் யூடியூப் தொகுப்பாளினி ஆகியோர் தலைகவசம் அணியாமல் வாகனத்தை இயக்கிக் கொண்டே நேர்காணல் எடுக்கப்பட்டிருக்கும். புல்லட்டில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானாது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த்திற்கு அபராதம் விதித்தது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தனது அதிகாரப்பூர்வ X தளத்திலும் பதிவிட்டுள்ளது. அதில், before என்று பதிவிட்டு நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி தலைகவசம் அணியாத படமும், After என்று போடப்பட்டு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அதில் Follow traffic rules, your safety is our priority என குறிப்பிடப்பட்டுள்ளது
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சாதி பாகுபாட்டால் இசைப்பள்ளி ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு? கரூரில் நடப்பது என்ன?