ETV Bharat / state

ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீசியதில் 6 பேர் காயம்! - Acid Attack In Chennai

Acid Attack In Chennai: சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது நடத்திய ஆசிட் வீச்சு சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 4:25 PM IST

ஆசிட் வீச்சு நடைபெற்ற இடத்தின் புகைப்படம்
ஆசிட் வீச்சு நடைபெற்ற இடத்தின் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் பாட்டிலை வீசி உள்ளனர். இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில், இரண்டு பெண்கள், ஒரு முதியவர், 3 குழந்தைகள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிகிறது.

மேலும், அந்த பகுதி முழுவதும் ஆசிட் நெடி வீசியதுடன் பலருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த கிண்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சாலையோரம் வசிக்கும் ஒரு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகவும், இந்த தகராறு காரணமாகவே ஆசிட் வீச்சு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாக்காளர் பெயர் நீக்கம்: திமுக அரசு மீது ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு! - Edappadi Palaniswami

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.