ETV Bharat / state

"சிறிய வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லை" - ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

AC Shanmugam: வேலூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை 60 சதவீதம் வாக்குச்சாவடிகளில் சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள சில சிறிய வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் வாக்காளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 3:49 PM IST

ஏ.சி.சண்முகம்

வேலூர்: வேலூர் அருகே சத்துவாச்சாரி பகுதியில் உள்ள எத்திராஜ் தனியார் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் வாக்குச்சாவடியில் புதிய நீதிக்கட்சி தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஏசி சண்முகம் வாக்காளர்கள் வாக்களிப்பதை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலூர் மக்களவைத் தொகுதியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

மக்கள் தங்களுடைய கடமையை நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வேலூர் மக்களவைத் தொகுதியில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது. பழுது ஏற்பட்டவுடன் வேறு இயந்திரத்தை மாற்றாமல், அதனை பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. சரி செய்து மீண்டும் பயன்படுத்தப்படும் பொழுது சில நேரங்களில் மீண்டும் பழுது ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் 60 சதவீதம் வாக்குப்பதிவு மையங்கள் சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சில பகுதிகளில் சிறிய சிறிய வாக்குச்சாவடி மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் வாக்காளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறேன். சில வாக்குச்சாவடி மையங்களில் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பூத் எண் 202-இல் அரசு பெண் அதிகாரி வாக்காளர்களை அசிங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதுபோன்ற செயல்கள் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேங்கை வயலில் பதிவாகாத ஓட்டு.. பரந்தூர் பிரச்சனையால் ஏகனாபுரத்தில் வாக்குப்பதிவு மந்தம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.