ETV Bharat / state

"மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.68 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன" - தமிழ்நாடு அரசு தகவல்! - TN Urban Habitat Development Board - TN URBAN HABITAT DEVELOPMENT BOARD

TN Urban Habitat Development Board: மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன எனவும், 89 ஆயிரத்து 429 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Urban Habitat Development Board Residential Photo
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு புகைப்படம் (Credit: Tamil Nadu DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 2:28 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 28 ஆயிரத்து 824 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடற்ற மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை ஏற்படுத்திட, தமிழ்நாடு முதலமைச்சர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள்: திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல், இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் 3,197.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு: தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 37,720 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 3,023 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான விற்பனைப் பத்திரங்கள் மற்றும் 1,733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டம்: மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89 ஆயிரத்து 429 பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2,078.37 கோடி திட்டமதிப்பீட்டில் 69,701 புதிய தனி வீடுகள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம்: சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 17 திட்டப் பகுதிகளில் உள்ள 7,582 சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் ரூ.1,608.88 கோடி மதிப்பீட்டில் 9,522 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள்: ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் ஆயுட்காலத்தினை அதிகரிக்க ரூ.59.80 கோடி செலவில் பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ள 117 திட்டப் பகுதிகளில் 76,434 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

புனரமைப்புப் பணிகள்: சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 79 திட்டப் பகுதிகளில் உள்ள 31,239 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்டமைப்பு வசதிகளை ரூ.82.57 கோடி செலவில் மேம்படுத்த இறுதி செய்யப்பட்டுப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நகர்ப்புற மக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் 4,771 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'வாழ்க்கையில் முன்னேற மார்க் மட்டும் போதாது.. ஒழுக்கமும் தேவை' - நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.