ETV Bharat / state

திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெப்பநிலை.. 11 இடங்களில் சதம் அடித்த வெயில்! - Today high temperature - TODAY HIGH TEMPERATURE

TN Weather Update: தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இன்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

TN Weather Update
TN Weather Update
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 9:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் குளிர் காலம், மழைக்காலம் முடிவடைந்து தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் மாநிலத்தில் உள்ள 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.

அந்த வகையில், இன்றைய தினம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 106.7°F வெப்பமானது பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,

  • திருச்சி - 105.08°F
  • வேலூர் - 104.9°F
  • ஈரோடு - 106.52°F
  • தருமபுரி - 104°F
  • கோயம்புத்தூர் - 102.38°F
  • சென்னை மீனம்பாக்கம் -100.94°F
  • மதுரை நகரம் - 102.2°F
  • மதுரை விமான நிலையம் - 103.46°F
  • நாமக்கல் - 103.1°F
  • சேலம் - 103.28°F

இதையும் படிங்க: சென்னை தி.நகரில் பிரசாரத்தை நிறைவு செய்த தமிழிசை செளந்தரராஜன்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.