ETV Bharat / state

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: 10 காளைகளை அடக்கிய அபி சித்தர் முதல் இடம் பிடித்து மஹிந்திரா கார் பரிசை வென்றார்..

Madurai Jallikattu Stadium: மதுரை கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பூவந்தி பகுதியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 10 காளைகளை அடக்கி முதல் பரிசாக மஹிந்திரா காரை பெற்றார்.

madurai keelakarai jallikattu
மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 10:08 PM IST

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து போட்டியைத் தொடங்கிவைத்தார். காலை 9.30 மணிக்குப் போட்டிக்கான உறுதிமொழி ஏற்பு தொடங்கிய நிலையில் 1 மணிக்குப் போட்டியின் முதல்சுற்று தொடங்கியது. இதில், 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, 5 சுற்றுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த மாடுபிடி வீரர்கள் 6வதாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு களம் கண்டனர். இதில், சிறப்பாகக் களம் கண்டு காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியைச் சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 10 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவருக்கு முதல் பரிசாக மகேந்திரா ஜீப் மற்றும் தமிழக அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

சிறந்த மாடுபிடி வீரருக்கான 2ஆம் பரிசாக சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் ஆகிய இருவரும் 6 காளைகளை அடக்கிய நிலையில் தலா 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 3ஆம் பரிசு பெற்ற மணிகண்டன் என்ற மாடுபிடி வீரருக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் சிறந்த காளைகளாக முதலாவது இடம் பெற்ற புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரது காளைக்கு மஹிந்திரா ஜீப் மற்றும் 1 லட்சம் காசோலையும், 2ஆம் இடம் பெற்ற திருச்சி அணைக்கரை வினோத் என்பவரின் காளைக்கு பைக் மற்றும் 75 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. 3ஆம் இடம் பெற்ற மதுரை அண்ணாநகர் பிரேம் ஜெட்லி என்பவரது காளைக்கு 50ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும், போட்டியின் போது சிறப்பாகக் களம் காணும் மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்குத் தங்கம் மோதிரம், தங்க நாணயங்கள் முதல் சைக்கிள் ஆகிய பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனிடையே சிறந்த காளைக்கான முதல்பரிசு அறிவிப்பில் முறைகேடு என 3 ஆம் இடம் பிடித்த காளை உரிமையாளர் பிரேம் குற்றம் சாட்டியுள்ளார், மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

26 பேர் காயம்: மதுரை கலைஞர் நூற்றாண்டு விழா அரங்க ஜல்லிக்கட்டு போட்டி நான்கு பெண்கள் உட்பட உட்பட 26 பேர் காயம் 4பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. மதுரை அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு அரங்க ஜல்லிக்கட்டு போட்டியில் 6 சுற்றுகள் நிறைவுற்ற நிலையில் 4 பெண்கள் உட்பட 26பேர் காயமடைந்த நிலையில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: சென்னைக்குள் இரவில் ஆம்னி பேருந்துகள் செல்ல தடை! மீறினால் கடும் நடவடிக்கை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.