ETV Bharat / state

திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்.. விண்ணைப் பிளந்த உடுக்கை முழக்கம்! - Aadi Krithigai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 4:09 PM IST

Updated : Jul 29, 2024, 4:59 PM IST

Aadi Krithigai Festival 2024: ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, திருத்தணி முருகன் திருக்கோயிலில் காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா
திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையன்று விரதமிருந்து வழிபட்டால், முருகன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். அந்த வகையில் திருத்தணி முருகன் கோயிலில், இன்று ஆடி கிருத்திகை திருவிழா களைகட்டியது. அதாவது, முருகனின் 5ம் படை வீடாகப் போற்றப்படும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வாய்ந்த ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா கடந்த சனிக்கிழமை ஆடி அஸ்வினியுடன் கோலாகலமாகத் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, 3ம் நாளான இன்று ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதற்கிடையே, முருகப்பெருமானுக்குக் காவடி செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து, விடிய விடிய காத்திருந்து வழிப்பட்டனர். தற்போது, திருத்தணி முருகன் கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மலைக் கோயிலில் குவிந்துள்ளனர்.

அதனால், கந்தனுக்கு அரோகரா கோஷத்துடன் காவடிகளின் ஓசைகளும், அரோகரா முழக்கங்களும் பம்பை, உடுக்கை முழங்க பக்தர்கள் புஷ்ப காவடி, மயில் காவடி, பன்னீர் காவடிகளுடன் முருகனின் பக்தி பாடல்களுடன் பரவசம் பொங்க, மலைக் கோயிலில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து காவடி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தினர்.

தற்போது, பக்தர்களின் வசதிக்காக 586 சிறப்புப் பேருந்துகள் மற்றும் மூன்று சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கோயிலைச் சுற்றி சுமார் 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வண்ணம் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் லண்டன் வாழ் தமிழர் குழுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி.. எப்போது தெரியுமா?

Last Updated : Jul 29, 2024, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.