ETV Bharat / state

போக்சோவில் கைதான காதலனை தேடி வந்த சிறுமி.. காதலன் எடுத்த திடீர் முடிவு.. திருப்பூரில் பரபரப்பு! - youth cut off his hand

Youth cuts his hand: சிறுமியை காதலித்து கடத்த முயன்றதாக போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த காதலனை தேடி வந்த சிறுமியை, பெற்றோரிடம் ஒப்படைக்க காதலனே பேருந்தில் அழைத்து வந்த போது சிறுமி செல்ல மறுத்ததால் பேருந்திலேயே காதலன் தனது கையை பிளேடால் கீறிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கையை அறுத்துக் கொண்ட இளைஞர் மற்றும் சிறுமி
இளைஞர் மற்றும் சிறுமி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 5:21 PM IST

திருப்பூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ராவ் மற்றும் ராணி பாய் தம்பதியின் மகளான 17 வயது சிறுமி 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அடுத்த அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சந்தோஷ் (24) என்பவருடன் பழகியுள்ளார். இதனிடையே, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதில், இருவரும் தப்பி ஓடி திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியைக் கடத்த முயன்றதாக சந்தோஷ் மீது புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், சந்தோஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே, சந்தோஷ் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளதை அறிந்து கொண்ட அந்த சிறுமி, கோவையிலிருந்து வந்து மீண்டும் தான் சந்தோஷ் உடனே இருந்து விடுவதாக அடம் பிடித்துள்ளார்.

அதன் பின்னர், சிறுமியை சமாதானம் செய்த சந்தோஷ் 18 வயது பூர்த்தியாகும் வரை பொறுமையாக இருக்கச் சொல்லி அறிவுரை கூறி பெற்றோர் வீட்டிலேயே சிறுமியை விடுவதற்காக திருப்பூரில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்தில் அழைத்து வந்துள்ளார். ஆனால் சிறுமி பெற்றோரின் வீட்டுக்குச் செல்ல மறுத்து, தொடர்ந்து அடம்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பேருந்து அவிநாசி அருகே வந்து கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் சந்தோஷ் தான் வைத்திருந்த பிளேடால் தனது கையை கீறிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளனர். அதனை அடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி, இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து விசாரித்த அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமிக்கு அறிவுரை கூறி, படுகாயம் அடைந்த சந்தோஷுக்கு முதலுதவி அளித்து அவரை அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெற்றோர் சென்னையில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் வரும் வரை சிறுமியை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சோஷியால் மீடியாவில் இருந்து பெண்களின் போட்டோக்களை எடுத்து தவறாக பயன்படுத்திய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.