சென்னை: சென்னை, தாம்பரம் அடுத்துள்ள கிழக்கு தாம்பரத்தில் அமைந்துள்ள ஆதி நகர் பகுதியில், தாம்பரம் மாநகராட்சி சார்பில் ஒப்பந்த நிறுவனம் மூலமாக பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணியானது, நேற்று (மார்ச் 17) காலை முதல் நடந்தது. இதன்படி, 15 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் ஊற்று நீர் வந்ததால். அதனை எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளிகள் இருவர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவு விபத்தில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் இருவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து, மண் சரிவில் சிக்கியவர்களில் ஒருவர் மேலே வந்த நிலையில், முருகானந்தம் (26) என்பவர் மட்டும் மண் சரிவில் சிக்கிக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு இது குறித்து தகவகல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் காவல்நிலைய போலீசார், மண் சரிவை ஜேசிபி மூலம் அகற்றி, தொழிலாளி முருகானந்தத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், முருகானந்தம் மண்ணில் பலமாக சிக்கிக் கொண்டதால், அவரை சேலையூர் காவல்துறையினர் மிகத் தீவிரமாகத் தேடியும், 3 மணி நேர நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டனர். இதன் தொடர்ச்சியாக மீட்கப்பட்ட முருகானந்தத்தின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மண் சரிவு விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பானிபூரி வியாபாரி மீது கார் ஏற்றி கொன்ற இளைஞருக்கு வலைவீச்சு..தூத்துக்குடியில் பரபரப்பு