ETV Bharat / state

மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாய்கள் அடித்துக் கொலை.. வைரலாகும் வீடியோ! - dogs on a tree and beating - DOGS ON A TREE AND BEATING

Dogs On a Tree And Beating: திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 2 நாய்களை கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொல்லும் நபர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த நாய்
உயிரிழந்த நாய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 10:24 PM IST

Updated : Aug 25, 2024, 10:41 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 2 நாய்களை கட்டி தொங்கவிடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தினருக்கு புகார் வந்தது.

நாய்கள் துன்புறுத்துவது தொடர்பாக வைரலாகும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், அந்த பகுதியில் இரண்டு நாய்களை சிலர் கட்டி தொங்கவிட்டு, கொடூரமாக அடித்தேக் கொல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகி நாகராஜ் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், "மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி, கோவில்மேட்டுப்புதூரில் உள்ள முத்துசாமி கோயில் பகுதியில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரது வளர்ப்பு நாயையும், இன்னொரு தெருநாயையும் மரத்தில் கட்டி தொங்கவிட்டும், அடித்தே கொன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்களைக் கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : கிருஷ்ணகிரி ஓசூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு! - Krishnagiri Accident

Last Updated : Aug 25, 2024, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.