ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்.. வைரலாகும் வீடியோ - ranipet gh glucose issue - RANIPET GH GLUCOSE ISSUE

Sanitary Worker Injecting Glucose Into Patient Issue : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர் குளுக்கோஸ் ஏற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குளுக்கோஸ் ஏற்றும் தூய்மை பணியாளர்
குளுக்கோஸ் ஏற்றும் தூய்மை பணியாளர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 10:51 AM IST

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர் கோதண்டம் என்பவர் குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தார்.

நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றும் தூய்மை பணியாளர் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர் ஒருவர் அதை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க, அதை கவனித்த தூய்மை பணியாளர் கோதண்டம் நீங்கள் யார்? என கேள்வி எழுப்பியதற்கு நீங்கள் ஊசி போடலாமா? என்று எதிர் கேள்வி எழுப்ப நான் ஊசி போடவில்லை குளுக்கோஸ் ஏற்றுகிறேன் என்று பதில் அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது அனைத்தும் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் முன்னிலையில் நடக்கிறது. இதைப் பார்க்கும் சக நோயாளிகள் அரசு மருத்துவமனையில் ஆள் பற்றாக்குறையால் தூய்மை பணியாளர் ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றுகிறாரா அல்லது பணியில் இருக்கும் செவிலியர்கள் சோம்பேறித்தனத்தால் இது போன்ற சம்பவம் நடக்கிறதா? என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க சுகாதாரத் துறையினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : எருமை தான் எனக்கு வாகனம்: மாற்றுத்திறனாளியின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.