ETV Bharat / state

சாலை தடுப்பில் வேன் மோதி விபத்து: தூத்துக்குடி சிறுமிக்கு நேர்ந்த சோகம் - Van Accident in Thoothukudi - VAN ACCIDENT IN THOOTHUKUDI

Thoothukudi Van Accident: தூத்துக்குடியில் திருமண வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் ஒன்று டயர் வெடித்து சாலை தடுப்பில் மோதிய விபத்தில், 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Accident Van Image
Accident Van Image (Photo Credit to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 1:12 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை விலக்கு அருகே வேன் ஒன்று திடீரென்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியினர் வேனில் இருந்த அனைவரையும் உடனடியான மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து வாகனத்தில் பயணித்த அனைவரும் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 11 வயது பிளசிங்கா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இதுகுறித்து தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வேனில் பயணித்தவர்கள் அனைவரும் சாயர்புரம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், நாகர்கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் ஊர் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக வேன் டயர் வெடித்து, தடுப்பு சுவரில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், வேனில் பயணித்த பிளசிங்காவின் தந்தை சிங்கராயன்(35), தங்கராஜ்(68), அவரது மனைவி மல்லிகா(60) மற்றும் சேர்மத்துரை என்பவரது மகள் அகீதா(15) ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுவன் பழைய குற்றாலம் வெள்ளத்தில் சிக்கியது எப்படி? மாவட்ட ஆட்சியரின் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.