ETV Bharat / state

பம்மல் அருகே திடீரென இருசக்கர வாகனங்கள் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு! - A Two Wheeler Suddenly Caught Fire

A Two-Wheeler Suddenly Caught Fire: சென்னை பம்மல் அருகே திடீரென இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டினுள் இருந்த பொருட்கள் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

A Two-Wheeler Suddenly Caught Fire
A Two-Wheeler Suddenly Caught Fire
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 7:35 PM IST

சென்னை: பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் (49). இவர் நேற்றிரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்த போது இன்று(ஏப்.8) அதிகாலை திடீரென வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மளமளவென தீ பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தம் அதிர்ச்சியடைந்து உடனடியாக குடும்பத்தினருடன் வெளியேறினார்.

மேலும், வெளியேறிய சிறிது நேரத்தில் வீட்டினுள் இருந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பிற பொருட்களும் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகின. மேலும், வீட்டிற்குள் தீ எவ்வாறு பற்றியது எனவும், முன் விரோதம் காரணமாக தீ பற்றியதா அல்லது மின் கசிவு காரணமாக தீ பற்றியதா என பல கோணங்களில் சங்கர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இவரது வீட்டின் அருகே நாய் ஒன்றை சில இளைஞர்கள் அடித்துத் துன்புறுத்தியதைத் தட்டி கேட்ட அதே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டியைக் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு இளைஞர்கள் சிலர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அரை நூற்றாண்டை நெருங்கும் அகதி வாழ்க்கை! இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்காதது ஏன்? - Srilankan Tamils Caa

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.