திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் அரசு மதுபான குடோனில் இருந்து 37 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை ஈச்சர் லாரி ஏற்றுக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மதுபான கடைகளில் பாட்டில்களை இறக்குமதி செய்வதற்காகப் புறப்பட்டது.
இந்த லாரி மாரப்பாடு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்றதாகவும் அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் சாலையோர தடுப்பு சுவற்றில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை நடுவே கவிந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநர் சிவக்குமார் மற்றும் கீளினர் சிறுகாயங்களுடன் உயர்தப்பினர். ஆனால் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்த 37 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் உடைந்து வீணாகின.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து மதுபான பாட்டில்களை எடுக்க முயன்ற சிலரை காவல்துறையினர் விரட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய நெடுஞ்சாலை நடுவே மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அடுத்த 7 நாட்களுக்கு குடையை ரெடியா வையுங்க.. வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு! - TN Weather Update