ETV Bharat / state

மணப்பாறை அருகே வெயிலின் தாக்கத்தால் பற்றி எரிந்த கார்? போலீசார் விசாரணை! - Car Fire Accident - CAR FIRE ACCIDENT

Car Fire Accident: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திடீரென கார் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் தீ பற்றி எரியும் புகைப்படம்
கார் தீ பற்றி எரியும் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 3:18 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள எடத்தெரு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனக்கு சொந்தமான செவ்ரோலெட் ஸ்பார்க் என்ற காரை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் நிறுத்தி வருவது வழக்கம். இந்தச் சூழலில், நேற்று மாலை வழக்கம் போல் தனது காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்ற அவர், இன்று காலை தனது மகனுடன் காரில் ஏறி சாவியை ஆன் செய்த போது திடீரென கார் எரியத் தொடங்கியுள்ளது.

இதைக் கண்டு பதறிய இருவரும் காரின் கதவை திறந்து வெளியேறிய நிலையில், தீ பற்றி எரிந்த இடத்தில் மண்ணை அள்ளி போட்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த செயல்முறை பலன் அளிக்காத நிலையில், தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நிலைய பொறுப்பு அலுவலர் ஜீவா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து காரில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அருகாமையில் இருந்த குடிசை பகுதியில் தீ பற்றி விடாமல் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள்ளாக கார் முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது.

இதனைத் தொடர்ந்து காரில் தீ பற்றியது வெயிலின் தாக்கத்தாலா அல்லது கார் பழுது காரணத்தாலா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் உள்ள வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது மணப்பாறையிலும் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ரயில் ஓட்டுனரின் அலட்சியமா? பாலக்காடு அருகே ரயில் மோதி யானை உயிரிழப்பு! - Elephant Died

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.