ETV Bharat / state

போதையில் மருத்துவர் ஏற்படுத்திய கார் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு! - School Student death - SCHOOL STUDENT DEATH

School Student death: குடிபோதையில் மருத்துவர் ஏற்படுத்திய கார் விபத்தில், 11ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தப்பியோடிய மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 10:26 AM IST

சென்னை: போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள வேணுகோபால் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்த இவர், பகுதி நேர வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பூந்தமல்லி சாலையில் தனது நண்பருடன் அவர் நடந்து சென்ற போது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். ஆனால், விபத்தை ஏற்படுத்திய நபர் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் மூளைச்சாவு அடைந்து நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்தியது மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவராக உள்ள சதீஷ் நாத் என்பதும், போதையில் அவர் விபத்தை ஏற்படுத்தியதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், மருத்துவர் சதீஷை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! உடலுக்கு ஆட்சியர் நேரில் அஞ்சலி - Organs Donate

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.