ETV Bharat / state

பழனியில் இன்று கடையடைப்பு போராட்டம்..வெறிச்சோடிய வீதிகள் - Protest in Palani - PROTEST IN PALANI

Protest in Palani: பழனி மலை அடிவாரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய விவகாரத்தில், பழனி முருகன் கோயில் தேவதஸ்தானத்தைக் கண்டிக்கும் விதமாக வணிகர்கள் பழனியில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழனியில் கடையடைப்பு போராட்டம்
பழனியில் கடையடைப்பு போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 11:06 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அடிவாரம் சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிரப்பு கடைகள் அதிகமாக இருப்பதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் கிரிவலப்பாதையில் எந்த விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கடைகள் வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான சிறு குறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் நகராட்சி விஷயங்களில் தலையிடுவதாகவும் கிரிவலப்பாதையானது, நகராட்சிக்கு சொந்தமானது. இதை பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 1948ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதில், 1974ஆம் ஆண்டு அரசாணையின்படி கிரிவலம் பாதையில் கோவில் நிர்வாகம் அடைக்கக் கூடாது என்கின்ற உத்தரவை மீறி தற்போது நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, கிரிவலப்பாதையில் அனைத்து விதமான வாகனங்களும் இவ்வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிகப்படியான வணிகக் கடைகளை அகற்றி வருவதாலும் மாற்று ஏற்பாடுகள் செய்து தராததால் தங்களது வாழ்வாதாரத்தை ஏற்கனவே இழந்துள்ள சிறு குறு வியாபாரிகளும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பழனி நகர்மன்ற கூட்டத்தில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் 33 வார்டுகள் உறுப்பினர்களும், ஒவ்வொரு கடைகளாக சென்று கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். இன்று கடையடைப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

முன்னதாக, ஆங்காங்கே உணவு பொட்டலங்கள், பிரட், பால் உள்ளிட்டவை வழங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பழனியில் நாளை கடையடைப்பு போராட்டம்.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.