ETV Bharat / state

“அது சவுக்கு சங்கரின் கருத்து”.. பெலிக்ஸ் ஜெரால்டின் RED PIX நிறுவனம் விளக்கம்! - Felix Gerald Cases - FELIX GERALD CASES

Savukku Shankar: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படும் வீடியோவை வெளியிட்ட RED PIX யூடியூப் நிறுவனம், அது சவுக்கு சங்கரின் சொந்த கருத்து எனவும், இருப்பினும் காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும், வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 7:46 PM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். அதேநேரம், இது தொடர்பான கானொலியை வெளியிட்டதாக தனியார் யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டை தமிழ்நாடு காவல்துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

அது மட்டுமல்லாமல், நேற்று ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதன் பேரில், 4 கேமரா, கணினி ஹார்ட் டிஸ்க் உட்பட 29 பொருட்களை திருச்சி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் RED PIX யூடியூப் நிறுவனம் தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை, அது RED PIX நிறுவனத்தின் கருத்தும் இல்லை. இருப்பினும், அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்திருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.

கடந்த ஏப்ரல் 30 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது.

சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக RED PIX ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் நிறுவனத்தில் இருந்து 29 பொருட்கள் பறிமுதல்! - Felix Gerald Home Raid

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.