ETV Bharat / state

"சரக்கு குடிச்சான் செத்துட்டான்" - உ.பி.யை சேர்ந்த வாலிபரின் மரணம் குறித்து முதலாளி வேதனை! - kallakurichi illicit liquor death

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 5:43 PM IST

Updated : Jun 23, 2024, 5:48 PM IST

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து இங்கு வந்து பானிபூரி வியாபாரம் செய்து கொண்டிருந்த நபரும் உயிரிழந்துள்ளார். அவரது உடலை பெற்று கொண்ட அவரது உறவினர்கள், கள்ளக்குறிச்சியிலேயே தகனம் செய்ய உள்ளனர்.

ஜிஜேந்தரின் நண்பர் சல்மான், முதலாளி சோனு
ஜிஜேந்தரின் நண்பர் சல்மான், முதலாளி சோனு (Image Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சம்பவம், ஈவிரக்கமின்றி இதுவரை 56 பேரின் உயிரை குடித்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் கள்ளக்குறிச்சி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பெருந்துயர் சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் உயிரையும் பலி கொண்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

ஜிஜேந்தர் என்ற 36 வயதான அந்த வாலிபர், உத்தரப் பிரதேச மாநிலம் ஓரை பகுதியைச் சேர்ந்தவர். பிழைப்புத் தேடி இரண்டு வருடங்களுக்கு முன் கள்ளக்குறிச்சிக்கு வந்தவர், எம்.ஆர்.நகரில் தங்கி. சோனு என்பவரிடம் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி , விடுமுறை எடுத்த ஜிஜேந்தர், தனது முதலாளி சோனுவிடம் 200 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கருணாபுரம் சென்றுள்ளார். அங்கு கள்ளச்சாராயம் குடித்தவர், வயிற்று வலியால் துடிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, ஐஸ் வியாபாரம் செய்துவரும் ஜிஜேந்தரின் நண்பர் சல்மான், ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போது, "நான் கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் இன்று வசித்து வருகிறேன். ஜிஜேந்தர் எனது நண்பர். எம்.ஆர்.நகரில் தங்கி, சோனு என்பவரிடம் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். அவ்வபோது கருணாபுரத்துக்கு வந்து அவரது வழக்கம்.

அதேபோன்று 19 ஆம் தேதியும் கருணாபுரத்துக்கு வந்த அவர், அங்கு விற்ற சாராயத்தை வாங்கி குடித்துள்ளார். அதன்பின் அவர் வயிற்று வலியால் துடிக்கவே, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்றிரவே அவர் இறந்துவிட்டார். தகவறிந்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வந்துள்ள ஜிஜேந்தரின் அண்ணனிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு, இங்கே தகனம் செய்யப்பட உள்ளது" என்று சல்மான் கூறினார்.

ஜிஜேந்தரின் முதலாளி சோனு கூறும்போது, " உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜிஜேந்தர் என்னிடம் தான் பானிபூரி விற்கும் பணியை செய்து வந்தார். இரண்டு, மூன்று மாதம் வேலை செய்வார். பிறகு ஒரு மாதம் ஊருக்கு போய் விடுவார். அப்படிதான் இந்த முறையும் ஊருக்குப் போய் திரும்பியவர் கள்ளச்சாராயத்துக்கு பலியாகிவிட்டார். சரக்கு குடிச்சான் செத்துட்டான். அவருக்கு தாய் மற்றும் அண்ணன் உள்ளனர்" என்று சோனு வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க: சினிமா டைரக்டர் ஆகணும்... கள்ளச்சாராயத்தில் தாய், தந்தையை இழந்த சிறுவனின் ஆசை!

Last Updated : Jun 23, 2024, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.