ETV Bharat / state

50 ரூபாயை காட்டி ரூ.3 லட்சம் கொள்ளை.. கண் சிமிட்டும் நேரத்தில் சென்னையில் நடந்த துணிகர சம்பவம்! - chennai robbery case - CHENNAI ROBBERY CASE

robbery in valasaravakkam: சென்னை வளசரவாக்கத்தில் ரூ.3 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ராஜசேகர், வளசரவாக்கம் காவல் நிலையம்
கைதான ராஜசேகர், வளசரவாக்கம் காவல் நிலையம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 7:14 PM IST

சென்னை: சென்னை வளசரவாக்கம் கைக்கான் குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாரதி (38). இவர் தனியார் பள்ளி ஒன்றில் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். தற்போது சொந்தமாக வீடு கட்டிவரும் அவர், கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் ரூபாய் மூன்று லட்சம் எடுத்துள்ளார். பின்னர் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் முன்புறத்தில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவரை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர் பாரதியிடம் '' 'கீழே 50 ரூபாய் கிடக்கிறது, அது உங்கள் பணம்தானா' என கேட்க, அதற்கு தன்னுடைய பணம் இல்லை என பாரதி மறுத்துள்ளார்.

பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து தனது வண்டியின் முன்பக்கத்தை கவனித்தபோது அதிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்தை காணவில்லை என்பதை பாரதி உணர்ந்துள்ளார்.

அதிர்ந்துபோன அலக், உடனே இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பணத்தை கொள்ளை அடித்த நபரை ஆந்திராவில் சென்று பிடித்தனர்.

விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் ஓ.ஜி குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (32) என்பது தெரியவந்தது. ராஜசேகரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்த போலீசார், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அவரது மூன்று கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்துக்கொலை.. கடலூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.