ETV Bharat / state

புறாவுக்காக இளைஞர் வெட்டி படுகொலை.. ராஜபாளையத்தில் நடந்தது என்ன? - Rajapalayam murder

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 3:46 PM IST

Murder Case: ராஜபாளையம் அருகே புறா வளர்த்ததில் இருவக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் கொலை சம்பவம் தொடர்பான புகைப்படம்
ராஜபாளையம் கொலை சம்பவம் தொடர்பான புகைப்படம் (Credit: ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன் குளத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். 27 வயதான இவர், ராஜபாளையம் அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த முருகராஜ் என்பவர், தனது மனைவி மற்றும் மகன் மணிகண்டனுடன் செங்கல் சூளையில் உள்ள அறையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இருவரும் தங்கியிருந்த செங்கல் சூளை அறையின் மாடியில் முருகராஜ், அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் புறாக்களை வளர்த்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, முருகராஜ் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி ஞானசேகர் திட்டி உள்ளார்.

இதன் காரணமாக, தனது மகனை அழைத்துக் கொண்டு முருகராஜ் வேறு செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் வளர்த்த புறாக்களை அங்கேயே விட்டுச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தான் வளர்த்த புறாக்களை எடுத்துச் செல்வதற்காக மணிகண்டன், ஞானசேகரின் செங்கல் சூளைக்கு வந்துள்ளார்.

ஆனால், அங்கு புறாக்களைக் காணவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து ஞானசேகரிடம் கேட்டதற்கு, பராமரிக்க இயலாதலால் புறாக்கள் பறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது புறாக்கள் மீண்டும் கிடைக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக ஞானசேகரை, மணிகண்டன் மிரட்டிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு (மே 11) விறகு பாரம் இறக்குவதற்காக ஞானசேகர் தன்னுடைய செங்கல் சூளைக்குச் சென்றுள்ளார். இதனை அறிந்த மணிகண்டன், தனது நண்பர்கள் நாகராஜ் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு, மாடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஞானசேகரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

பின்னர், விறகு பாரம் இறக்க வந்த டிராக்டர் ஓட்டுநர் முனியசாமி என்பவர் அளித்த தகவலின் பெயரில், ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, ஞானசேகர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஞானசேகரின் தந்தை பாக்கியநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பாய்ந்தது! - Savukku Shankar Goondas Act

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.