கோயம்புத்தூர்: கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், கோலிப்பாறை நாலு சென்ட் காலனியைச் சேர்ந்தவர், ரெகு(54). இவர் கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறையில் தங்கி அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.
எப்போதும் பணியை முடிந்துவிட்டு மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதை ரெகு வழக்கமாக வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு ஸ்டாண்மோர் கரும்பாலம் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது வால்பாறையில் இருந்து இஞ்சிப்பாறை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று ரெகு மீது மோதியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அமரர் ஊர்தியை அனுப்பி பிரேதத்தை மீண்டும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய நபர் இஞ்சிப்பாறையைச் சேர்ந்த வீரய்யா மகன் பாலாஜி (27) என்பதும் இவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலஜியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடமை தவறிய போலீஸ் டிஸ்மிஸ்.. ஒரு சில நாட்களில் ஓய்வு பெற இருந்த காவலர் சஸ்பெண்ட்!