ETV Bharat / state

அமைந்தகரை வீட்டில் பாலியல் தொழில்.. மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்.. சென்னை க்ரைம்! - chennai crime news

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னையில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது முதல் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுவர் வரை சென்னையில் நடைபெற்ற குற்றச் செய்திகளைக் காணலாம்.

கைது செய்யப்பட்ட நபர் கோப்புப்படம்
கைது செய்யப்பட்ட நபர் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் நபர்களைக் கண்காணிக்கும் பணியில் போலீசார் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை பெருநகர விபச்சார தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டைக் கண்காணித்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அந்த விசாரணையில், சந்தோஷ் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சந்தோஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மீட்கப்பட்ட 4 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல், கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெருவில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜன், மணி, ரவி, சீனிவாசன், மோகன் உட்பட 12 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.15,850 மற்றும் 6 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் பழையவண்ணாரப்பேட்டை ராமானுஜம் தெருவில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தை கண்காணித்து, அங்கு பணம் வைத்து சீட்டுக் கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளமாறன், ஜெயராமன், சுந்தரமூர்த்தி, கல்யாணசுந்தரம், முருகதாஸ் உட்பட 11 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.6,070 மற்றும் 3 சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 23 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : சொத்து தகராறில் மகனை அடித்துக் கொலை செய்த தந்தை கைது.. அறந்தாங்கியில் பயங்கரம்!

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக் நகர் போலீசார் வழிப்பறி வழக்கில் 16 வயது சிறுவனைக் கைது செய்து கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்நிலையில், போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறுவனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டு பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுவனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கூர்நோக்கு இல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவனை அதிகாரிகள் அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.‌ மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்றார்.

இதனால் பதறிப்போன போதை மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி யுவராஜ் இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 வயதுடைய சிறுவனை கைது செய்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.