ETV Bharat / state

ஆம்பூரில் பிரபல ஹோட்டல் பிரியாணியில் நெளிந்த புழு.. வாடிக்கையாளர் வாக்குவாதம்! - BIRYANI ISSUE IN AMBUR

ஆம்பூர் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டபோது இலையில் புழு இருந்ததால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரியாணியில் நெளிந்த புழு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்
பிரியாணியில் நெளிந்த புழு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 6:40 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள பிரியாணி ஹோட்டல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடியாத்தம், சந்தப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவர், தனது மூன்று குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலை சுற்றுலா சென்ற போது ஆம்பூரில் நிறுத்தி, பிரபல பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, குழந்தைகள் சாப்பிட்ட பிரியாணியில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த சதீஷ், இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் நூருத்தீனிடம் கேட்டபோது, அவரும் மற்றும் பணியாளர்களும் சரிவர பதிலளிக்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஹோட்டல் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடம் புழங்கும் கூல் லிப் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார், விரைந்து சென்று இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து பிரியாணி ஹோட்டல் உரிமையாளர் நூருத்தீனிடம் கேட்ட போது, “பிரியாணியில் உயிருடன் புழு இருக்க வாய்ப்பில்லை.

பிரியாணி தயாரிக்கும் போதும் சரி, அதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போதும் சரி, நூறு சதவீதம் அரசின் விதிகளைக் கடைபிடித்து சுத்தமாக தான் உணவுகளை வழங்கி வருகிறோம். மழைக்காலம் என்பதால், பிரியாணி வழங்கிய வாழை இலையின் பின்புறத்தில் புழு இருந்திருக்கலாம். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.