ETV Bharat / state

கோயம்பேடு அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி நடுரோட்டில் படுகொலை.. போலீசார் விசாரணை! - Koyambedu Murder - KOYAMBEDU MURDER

Koyambedu Murder: கோயம்பேட்டில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி முகமது ஆதாம் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்,

படுகொலை செய்யப்பட்ட முகமது அதாம் புகைப்படம்
படுகொலை செய்யப்பட்ட முகமது அதாம் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:50 PM IST

சென்னை: கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆதாம் (32). கோயம்பேடு காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர், நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மர்ம கும்பல் வழி மறித்து முகமது ஆதாமை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஆதாம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கியுள்ளார். இதையடுத்து, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இறந்து போன முகமது ஆதாம் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில், கோயம்பேடு காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான முகமது ஆதாம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது முன்விரோதம் காரணமாக, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, முகமது ஆதாமை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நகைக்கடையின் சுவரை துளையிட்டு தங்கம், வெள்ளி கொள்ளை.. தாம்பரம் அருகே பரபரப்பு! - Gold Robbery In Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.