ETV Bharat / state

சென்னையில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டு இளைஞரின் வீடியோ வைரல்.. போலீஸ் விசாரணை! - A Foreign Youth dispute In Chennai

A Foreign Youth Dispute In Chennai: சென்னையில் மது அருந்திவிட்டு சட்டை இல்லாமல் ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டு இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A Foreign Youth dispute In Chennai
மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டு இளைஞரிடம் போலீசார் விசாரணை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 5:39 PM IST

மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டு இளைஞரிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று இரவு (மார்ச்.31) வெளிநாட்டு இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு சட்டை இல்லாமல் சாலையின் நடுவே ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்டு, அவ்வழியாக வந்த வாகன ஒட்டிகள் அந்த நபரை ஓரமாகச் செல்லுமாறு கூறி உள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த வெளிநாட்டு இளைஞர் வாகன ஓட்டிகளைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க முயன்றனர்.

அப்போது அந்த இளைஞர் போலீசாரையும் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், போலீசார் அந்த நபரை ஆட்டோவில் ஏற்றிக் காவல் நிலையம் அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட நபர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க: +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது.. ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை வழங்கிய அறிவுரைகள் என்ன? - TN HSC BOARD EXAM

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.