ETV Bharat / state

காலையிலேயே அதிர்ச்சி! சாலை விபத்தில் பிஞ்சுக் குழந்தைகள் பலி! - Ramanthapuram Road Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 9:44 AM IST

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Ramanathapuram Road Accident (ETV Bharat)

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவரது மனைவி பாண்டி செல்வி (வயது 28), அவர்களின் மகள்கள் தர்ஷினா ராணி (வயது 8), பிரணவிகா (வயது 4) மற்றும் 12 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தை ஆகியோர் தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

12 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜேஷ் அவரது மனைவி பாண்டி செல்வி, அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் பாண்டி செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் (வயது 70), அங்காலேஸ்வரி (வயது 58) ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று விட்டு, வாடகை காரில் தங்கச்சிமடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ராஜேஷ் சென்ற காருக்கு முன்னால் திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென பேருந்துக்குள் வாந்தி எடுத்ததால் ஓட்டுநர் திடீரென நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதை எதிர்பாராத கார் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது.

இந்த விபத்தில் ராஜேஷ் அவரது மகள்களான தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் அவரது உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் டிரைவர் பிரிட்டோ (வயது 35), ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது 12 நாள் கைக்குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுவீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.. முதலமைச்சர், ஈடிவி பாரத்துக்கு நன்றி! - Padma shri Chinnapillai new house

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.