ETV Bharat / state

உதகை நகரில் உலா வரும் ஒற்றைக் கரடி..பொதுமக்கள் பீதி! - Tamil Nadu Forest Department

bear visit: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

bear walks in the ooty town
உதகை நகரில் உலா வரும் ஒற்றைக் கரடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 6:05 PM IST

உதகை நகரில் உலா வரும் ஒற்றைக் கரடி

நீலகிரி: சுற்றுலாத் தலத்திற்குப் பெயர் போன நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகளைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது தொடர்கதை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு உதகை நகரில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் கரடியானது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக G1 காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. பின்னர் மீண்டும் அப்பகுதியில் இருந்து வெளியேறி, ஸ்டேட் பேங்க் காலணி மற்றும் குடியிருப்பு சாலைகளில் உலா வந்தது. அதிகாலை வரை உதகை நகரில் சுற்றித்திரிந்த கரடி விடிவதற்குள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கரடி, யாணை காட்டொருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எனப் பலரும் அச்சமடைந்து வருகின்றனர்.

மேலும் இங்கு சுற்றித் திரியும் ஒற்றை கரடியால், மனித வனவிலங்கு மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கரடியைக் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் கரடி உலா வரும் பகுதிகளில் தற்போது ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் “கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரத்தில் உதகை நகரப் பகுதியில் கவனமுடன் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.மேலும் கரடியைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.