ETV Bharat / state

கன்னியாகுமரியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் தேசியக்கொடியை பறக்கவிட கோரிய வழக்கு; அரசு தரப்பில் அறிக்கை தாக்கல்! - Kanyakumari Zero Point Flag - KANYAKUMARI ZERO POINT FLAG

High Court Madurai Bench: கன்னியாகுமரியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள 147 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தேசியக் கொடியை பறக்கவிட உத்தரவிட கோரிய வழக்கில், கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 7:53 PM IST

மதுரை: நாகர்கோவிலைச் சேர்ந்த விஜயகுமார் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். இவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் தொகுதிக்கு என 5 கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்று பொதுப்பணிகளுக்காக பயன்படுத்தலாம்.

நான் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் எம்பி நிதியில் இருந்து, சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் நினைவுச் சின்ன தேசியக்கொடி அமைப்பது தொடர்பாக முடிவு செய்து, அதற்கான திட்ட அறிக்கையும் தயார் செய்தோம். 2022ஆம் ஆண்டு அதற்கான அனுமதி பெறப்பட்டு, நினைவுச் சின்ன தேசியக்கொடி கம்பம் 147 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அதில் தேசியக்கொடி பறக்க விடப்படுவதில்லை. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 148 அடி உயரத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் இரண்டாவது உயரமான கொடிக் கம்பமாக இது அமைந்துள்ளது. அது முறையாக பராமரிக்கப்படாததால், தற்போது வரை கொடி பறக்க விடப்படாமல் வெறுமனே உள்ளது.

சுற்றுலாத் தலமாக இருக்கும் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னமான கொடி கம்பத்தில் மீண்டும் தேசியக்கொடியை பறக்கவிட தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட இடத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு விட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த தேசியக்கொடியை பராமரிப்பு செய்வதற்காக வங்கியில் வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இன்று பறக்க விடப்பட்ட தேசியக்கொடி தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும், தேசியக்கொடிக்கு எந்த களங்கமும் ஏற்படாத வகையில் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மைய வழக்கு; மத்திய அரசுக்கு கால அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.