தேனி: தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர், பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 4ஆம் தேதி கைது செய்தனர்.
அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் விசாரித்து வந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பெயரில், மாவட்ட ஆட்சியர் ஷஜுவனா உத்தரவின் பெயரில் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'இதற்கு தானே சுதந்திரம் பெற்றோம்'.. மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி! - Savukku shankar case