ETV Bharat / state

'முதல்வர் கான்வாய் வருது'.. குறுக்கிட்ட காவலர்.. அப்சட்டான ஆட்டோ.. சென்னையில் சிறுவன் பரிதாப பலி! - boy died in auto accident

chennai auto accident in cm convoy route: சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 வயது சிறுவன் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுவன் (கோப்புப்படம்)
உயிரிழந்த சிறுவன் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 3:48 PM IST

சென்னை: சென்னை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் செல்வதற்காக காமராஜர் சாலையில் கான்வாய் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கவனிக்காமல் வந்த ஆட்டோ ஓட்டுநர் சிக்னல் ஆஃப் செய்து வைத்துள்ளதால், வலது புறம் ஏறி சென்று விடலாம் என ஆட்டோவை திருப்பியுள்ளார்.

அங்கு கான்வாய் பாதுகாப்பில் இருந்த பெட்டாலியன் காவலர் மகேந்திரன் என்பவர் முதல்வர் கான்வாய் வாகனம் மிக அருகில் வந்ததால் வலது புறம் சென்ற ஆட்டோவை இடது புறம் வருமாறு கூறியிருக்கிறார். அப்போது வேகமாக வந்த ஆட்டோ உடனடியாக இடது புறம் வரவே கட்டுப்பாட்டை இழந்து காவலர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோபிநாத்தின் மகன் அலோக்நாத் தர்ஷன் என்ற 5 வயது சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மற்றொரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அடிபட்ட குழைந்தையை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது முதலமைச்சர் கான்வாய் சிறிது நேரம் அங்கு நின்றுள்ளது.

இது குறித்து முதலமைச்சருக்கு தகவல் தெரியவரவே உடனடியாக குழைந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனை அடுத்து சிறுவனை சக்தி மருத்துவமனையில் இருந்து கிரிம்ஸ் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆட்டோ விபத்தில் காயமடைந்த காவலர் மகேந்திரன் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தை உயிர் இழந்த விவகாரத்தில் காவலர் மகேந்திரன் மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய செயல் செய்தல், அஜாக்கிரதையாக செய்த செயலால் பிறருக்கு மரணம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை நீச்சல் குளத்தில் சிறுவன் பலி.. தாய் கண் முன்னே நடந்த துயரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.