ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேர் பலி! - kallakurichi Illicit alcohol death - KALLAKURICHI ILLICIT ALCOHOL DEATH

kallakurichi Illicit alcohol death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 2:58 PM IST

சேலம்: கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 80க்கும் மேற்பட்டோருக்கு திடீரென கண் எரிச்சல், வயிற்று வலி என உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், அவர்களின் உறவினர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் மேல்சிகிச்சைக்காக 42 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி , மாதவச்சேரியைச் சேர்ந்த நாராயணசாமி , வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த ராமு, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி ஆகியோர் பரிதாபமாக நேற்றிரவு உயிரிழந்தனர். மாதவச்சேரியைச் சேர்ந்த வீரமுத்து, முத்து, சந்திரசேகர் கருணாபுரத்தைச் சேர்ந்த சிவா, அருள், கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி, வீரமுத்து, செல்வராஜ், கலியன், கணேசன், சுரேஷ், சங்கர், கோட்டமேடு பகுதியைச் சேர்ந்த ரவி, ராஜேந்திரன், ஆனந்தன் உள்ளிட்ட 42 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் சேலம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை 42 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, ஆகிய மூன்று பேர் நேற்றுிரவு உயிரிழந்தனர்.

இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆனந்தன்(50), ரவி(60), மனோஜ்குமார் (33), ஆனந்த் (47), விஜயன்(59) ஆகிய ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது நாகபிள்ளை(39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சேலம் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: தெருவுக்கு ஒரு சடலம் : கள்ளச்சாராயத்தால் சீரழிந்த கள்ளக்குறிச்சி! நடந்தது என்ன? - kallakurichi Illegal Liquor Death

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.