ETV Bharat / state

1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி.. பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீசில் புகார்! - swarnatara groups scam - SWARNATARA GROUPS SCAM

swarnatara groups scam: திருவள்ளூரில் 1,930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சம்

பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்
பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியிடம் புகார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 9:18 PM IST

திருவள்ளூர்: ஒரு லட்சம் கட்டினால் 4 லட்சம் ரூபாய் திருப்பி வழங்கப்படும் என நம்பவைத்து 1930 பேரிடம் சுமார் ரூ. 87 கோடி மோசடி செய்ததாக ஸ்வர்ணதாரா குழுமத்தின் பிசினஸ் அசோசியேட்டர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி (Video Credits - ETV Bharat Tamilnadu)

சென்னையில் ஸ்வர்ணதாரா குழுமம் என்ற பெயரில் நிதி நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அளிக்கப்படும் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏராளமானவர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். அந்த வகையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 சதவீதம் லாபத்தை வருடாவருடம் கொடுப்பதாகவும், மூன்று வருடத்திற்குப் பிறகு முதலீடு செய்த தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளனர். இவர்கள் கூறியதை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் வட்டி பணத்தை திருப்பி தந்துள்ளனர்.

இந்நிலையில், திருவள்ளூரில் ரூ.87 கோடி மோசடி செய்ததாக ஸ்வர்ணதாரா குழுமத்தின் பிசினஸ் அசோசியேட்டர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “ திருவள்ளூரில் 2019 ஆம் ஆண்டு ஸ்வர்ணதாரா நிறுவனத்திற்கு, திருவள்ளூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கன் (76) என்பவரை பிசினஸ் அசோசியேட்டாகவும், அவரது மனைவி வசந்தி, மகள் பவானி, மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் புரோக்கர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் திருவள்ளூர், பெரம்பலூர், சென்னை, அரியலூர், வேலூர் மற்றும் பிற மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து ஸ்வர்ணதாரா குரூப் ஆஃப் கம்பெனிக்கு, ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என கிட்டத்தட்ட 1930 பேரிடமிருந்து ரூ.87 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். மேலும், 2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் அறிவித்தபடி பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர்.

ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு வட்டிப் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிக்கின்றனர். இதுகுறித்து பாண்டுரங்கனிடம் கேட்டபோது, “ நீங்கள் செலுத்திய பணத்தை ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்தில் செலுத்தியதாகவும் அவர்கள் தரவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

பாண்டுரங்கனை நம்பி கிட்டத்தட்ட 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு, கிட்டத்தட்ட 1930 நபர்களிடமிருந்து ரூ.87 கோடி வரை வசூல் செய்து அவரிடம் வழங்கியுள்ளோம். ஆனால், அவர் ஸ்வர்ணதாரா நிதி குழுமத்தில் இந்த பணத்தை செலுத்தினாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. அவர் கோடி கணக்கில் கமிஷன் பெற்றுள்ளார். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணத்தை பெற்றுத்தர வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும்” இவ்வாறு கூறினர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ,வியாபாரிகள் என 1930 பேரிடம் ரூ. 87 கோடிமோசடி செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை..சென்னையில் ஒடிசா தம்பதி கைது! - பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.