ETV Bharat / state

பக்கவாதம் அறிகுறிகள், காரணங்கள் என்னென்ன? சிகிச்சை முறையை விளக்கும் மருத்துவர்!

பக்கவாதம் நோய் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளினால் தான் 80 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது என அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாசன் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சீனிவாசன் பரமசிவம்
மருத்துவர் சீனிவாசன் பரமசிவம் (Credit - ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Health Team

Published : Oct 30, 2024, 2:19 PM IST

சென்னை: இந்தியாவில் ஆண்டுதோறும் 1.80 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பக்கவாதத்தினால் புதிதாக பாதிக்கப்படுவதாககவும், 80 சதவீதம் பேருக்கு ரத்த அடைப்புகளினால் பக்கவாதம் ஏற்படுகிறது என அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாசன் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

உலக பக்கவாதம் தினம் (World Stroke Day) அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் பக்கவாதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

பாதிப்பு எண்ணிக்கை?: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போலோ மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.25 மில்லியனாக இருந்த நிலையில், 2023ல் சுமார் 1.80 மில்லியனாக அதிகரித்திருக்கிறது.

அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் சீனிவாசன் பரமசிவம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "பக்கவாதம் நோய் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளினால் தான் 80 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. பக்கவாத பாதிப்பு இருப்பது தெரியவந்த உடனேயே, சிகிச்சை பெற வேண்டியது மிக மிக அவசியம்.

அறிகுறிகள்:

  • உடலில் உணர்வின்மை அல்லது உடலின் ஒரு பக்கத்தில் கல்,கால் பலீனமாக உணர்வது
  • திடீரென ஒரு புற கண் பார்வையில் குறைபாடு
  • சிரிக்கும் போது, ஒரு புறத்தில் வாய் கோணலாக போவது
  • இரு கைகளையும் மேலே தூக்க முடியாமல் இருப்பது
  • சரலமாக பேச முடியாமல் போவது

மீண்டு வரும் வாய்ப்பு: பாதிப்பு ஏற்பட்ட முதல் 4 மணி 30 நிமிட நேரத்தை மருத்துவ உலகில் ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கின்றனர். 4 மணி 30 மணிநேரத்திற்குள்ளாக பக்கவாத பாதிப்பிற்கான சிகிச்சையை அளிப்பதன் மூலம் பக்கவாத பாதிப்பான உடல் செயல்பட இயலாத நிலையைக் குறைப்பதிலும், பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை மருத்துவ குழு
அப்போலோ மருத்துவமனை மருத்துவ குழு (Credit - ETVBharat TamilNadu)

தற்காப்பது எப்படி?: பக்கவாதம் வராமல் தடுப்பதற்கு வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பக்கவாதம் நோய் வந்தவர்களின் மூளையில் உள்ள செல்கள் வேகமாக செயலிக்கும் எனவே விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

பக்கவாதம் நோய் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளினால் தான் 80 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது எனவும், நவீன சிகிச்சை முறையில் 3 மணி நேரத்திற்குள் சிகிச்சையை துவங்கினால் குணப்படுத்த முடியும்" என்றார்.

சிகிச்சை முறை: அதனை தொடர்ந்து பேசியவர், "அதிநவீன ரோபோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் மேம்படுத்தப்பட்ட நோயறியும் கருவிகள் மற்றும் பக்கவாத நோயாளிகளுக்கு விரைவாகவும் திறம்படவும் சிகிச்சை அளிக்க பல்நோக்கு சிறப்பு சிகிச்சை நிபுணர்களின் குழு என ஒரு முழுமையான மருத்துவ பராமரிப்புக்கு அவசியமானவற்றை ஒருங்கிணைத்து முழுவீச்சியில் சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

நாளத்தில் பெரும் அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு த்ரோம்பெக்டோமி [thrombectomy] சிகிச்சையளிப்பது, பக்கவாதம் தொடங்கிய 24 மணி நேரம் வரை பயனுள்ளதாக இருக்கும். ஒருங்கிணைந்த சிகிச்சையால் பாதிப்பினால் உண்டாகும் சிக்கல்களைக் குறைக்க செய்வதோடு அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த உதவுகிறது.

தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிடி ஸ்கேன் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அனுப்பப்படுகிறது. இதனால் 4 நிமிடத்திற்குள் அவருக்கான சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க:

ரொம்ப நேரம் உட்கார்ந்து வேல பார்த்தா பக்கவாதம் வருமா?... நிபுணர்கள் சொல்வது என்ன?

5 ஆண்டுகளில் 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை.. சென்னை அப்பல்லோ சாதனை!

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.