ETV Bharat / state

பக்கவாதத்திற்கு சித்த மருந்து கண்டுபிடித்த பேராசிரியர்.. 78 வயதில் கிடைத்த முனைவர் பட்டம்! - A 78 year old man with a PhD - A 78 YEAR OLD MAN WITH A PHD

கன்னியாகுமரியில் உள்ள மருந்துவாழ் மலையை தனியார் நிறுவனம் உடைப்பதாகவும், அதனை அரசு பாதுகாத்து சித்த மருத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் 78 வயதில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்ற தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முனைவர் பட்டம் பெற்ற 78 வயது முதியவர் தங்கமணி
முனைவர் பட்டம் பெற்ற 78 வயது முதியவர் தங்கமணி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 6:19 PM IST

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பவள விழா அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் இணைவேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் பத்மவிபூஷன் அணில் ககோட்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7ஆயிரத்து 821 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில், நேரடியாக 1,031 மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். இதில் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் 89 ஆயிரத்து 53 பேருக்கும், தொலைதூர கல்வி இயக்கத்தின் மூலம் பயின்ற 16,263 மாணவர்களும், பல்கலைக்கழக துறைகளில் 1,404 மாணவர்களும், முனைவர் பட்டப்படிப்பில் 70 மாணவர்கள் என மொத்தம் 1,07,821 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

மேலும், இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், பக்கவாதத்திற்கு சித்த மருந்து கண்டுபிடித்தவருமான 78 வயது தங்கமணிக்கு, சித்த மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காக இலக்கியவியல் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

இது குறித்து பட்டம் பெற்ற முதியவர் தங்கமணி கூறுகையில், "தமிழ்ப்பண்பாடு சித்த வைத்தியம் மற்ற மருத்துவம் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்ததல்ல. ஆங்கிலேயர் சித்த வைத்தியத்தை மேம்படுத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. சித்த மருத்துவத்தை பொறுத்தவரை மத்திய அரசு ஆதரவு கொடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு இதை தற்போது ஊக்குவித்து வருகிறது.

இதையும் படிங்க: கிண்டி ரேஸ் கிளப்பை நீர்நிலையாக மாற்ற சாத்தியம் இல்லை - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

மாநில கல்லூரியில் பேராசிரியர் பணியை முடித்த பின்னர் சித்த மருத்துவத்தின் வரலாறு குறித்து ஆராய்ச்சியை செய்தேன். ஆராய்ச்சிக்கு வயதே இல்லை, சென்னை பல்கலைக் கழகத்தில் 2015ஆம் ஆண்டு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தேன். ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முனைவர் பட்டம் கிடைக்கிறது.

எனது சித்த மருத்துவ ஆராய்ச்சி மூல புதிய மருந்துகள் கொண்டு வந்துள்ளேன். பக்கவாததிற்கு இதுபோன்று சித்த மருத்துவம் கிடையாது. வாழை தண்டை வைத்து இதை உருவாக்கலாம் சித்த மருத்துவம் தழைத்து நிற்கும் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம்.

மேலும், அங்கு உள்ள மருந்துவாழ் என்ற மலையில் எங்கு பார்த்தாலும் மருந்து செடி இருக்கும். அங்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை நிறுவலாம். மேலும், இந்த மலையை தனியார் நிறுவனம் உடைத்து வருகிறது. அதனை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது, ஆராய்ச்சியை புத்தகமாகவும் வெளியிட உள்ளேன்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.