ETV Bharat / state

"ரெட் ஜெயண்ட் மூவீஸ்காகவே பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் பிலிம் சிட்டி" - அண்ணாமலை குற்றச்சாட்டு!

Annamalai Speech: உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்காகவே பூவிருந்தவல்லியில் 500 கோடி ரூபாயில் பிலிம் சிட்டி திட்டம் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 10:57 PM IST

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பூவிருந்தவல்லியில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பூவிருந்தவல்லி அடுத்த நசரதேட்டையில் மக்கள் முன்பாக பேசினார்.

அப்போது பேசிய அவர், "2023 மிக்ஜாம் புயலில் பூவிருந்தவல்லி மிதந்தது. வடிகால், குடிநீர், சாலைக்கு தீர்வு காண வேண்டும். கலைஞர் 100 விழாவில் சினிமாக்காரர்களை அழைத்து 500 கோடி ரூபாயில் பூவிருந்தவல்லியில் பிலிம் சிட்டி திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த 500 கோடி இருந்தால் மக்களுக்கு நல்ல சாலை, குடிநீர், பாதாள சக்கடை திட்டம் கொண்டு வரலாம்.

ஆனால் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸுக்கு படம் தயாரிக்க ஒரு பிலிம் சிட்டி தேவை அதற்கு தான் இந்த பிலிம் சிட்டி. இந்தியா டுடே கருத்து கணிப்பில் முதல்வர் பணி செய்வது 36 சதவீதம் என வந்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்கள் தரம் உயர்ந்துள்ளது.

ஆனால் சென்னை அப்படியே தான் உள்ளது. சென்னை சுற்றியுள்ள தொகுதிகள் அதிலாபாதளத்தில் செல்கிறது. இதற்கு திமுகவின் குடும்ப ஆட்சி தான் காரணம். சென்னை குப்பை நகரமாக உள்ளது. தூய்மை நகரப் பட்டியலில் 44 இடத்தில் இருந்த சென்னை தற்போது 199 இடத்திற்கு சென்றுள்ளது.

12 சதவீதம் குப்பைகள் மட்டும் தான் சென்னையில் அகற்றப்படுகிறது. அதுவும் எரித்தும் மக்கியும் அகற்றப்படுகிறது. மீதமுள்ள குப்பைகள் அப்படியே கிடக்கின்றன. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் என வெவ்வேறு இடத்திற்கு மாற்றி வைக்கின்றனர். தமிழ்நாட்டில் 8 ஆயிரம் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பற்றாக்குறை பணம் இல்லை என பல காரணங்களால் கடந்த 36 மாதத்தில் 8 பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு குடும்ப அரசியலில் மட்டிக்கொண்டு எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் இருந்து வருகின்றனர். 2024 -2029 பாஜக ஆட்சியில் அனைத்து வீட்டிற்கும் கேஸ் இணைப்பு, சுத்தமான குடிநீர், 300 யூனிட் சோலார் மூலம் மானிய கரண்ட் என பல்வேறு திட்டங்கள் உள்ளது. 400 இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் மோடி ஆட்சி செய்வார்" என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.