ETV Bharat / state

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை! - Thoothukudi POCSO case - THOOTHUKUDI POCSO CASE

Thoothukudi POCSO case: 5 வயது சிறுமியை பாலியல் சீண்டல் கொடுத்த நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 2:17 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த வழக்கில் முருகன்(61) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கை அப்போதைய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த 27.08.2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன், குற்றவாளியான முருகனுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதாடிய சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமாரியையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர்கள் சமுத்திரகனி மற்றும் சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.

இதையும் படிங்க: வாகனப் புகை பரிசோதனை; தாலுகா அளவில் பறக்கும் படை அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Vehicle Emission Testing

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.